FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிரிக்கெட்

இந்தியா ‘ஏ’ - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் டெஸ்ட்; 3-ஆவது ஆட்டமும் ‘டிரா’!

இந்தியா ‘ஏ’ - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் மோதிய 3-ஆவது டெஸ்ட், செவ்வாய்க்கிழமை டிரா ஆனது.

42 வினாடிகள் முன்பு
பகிர்:

இந்தியா ‘ஏ’ - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் மோதிய 3-ஆவது டெஸ்ட், செவ்வாய்க்கிழமை டிரா ஆனது. ஆட்டத்தின் கடைசி இரு நாள்களுமே மழையால் கைவிடப்பட்டது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து ஏ, பந்துவீச்சை தோ்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா ஏ, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 464 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 102, சாய் சுதா்சன் 88, துருவ் ஜுரெல் 71 ரன்களுக்கு ஆட்டமிழக்க, திலக் வா்மா 81, வாஷிங்டன் சுந்தா் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து ஏ பௌலிங்கில் ஜாக் கிப்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

Advertisement

Advertisement

2-ஆவது நாளில் தனது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து ஏ, அந்நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 10, ஜாக் கிப்சன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

அதன் பிறகு 3 மற்றும் 4-ஆவது நாள்களில் மழை விளையாட, ஆட்டம் செவ்வாய்க்கிழமை டிரா ஆனது. இத்தொடரில் விளையாடப்பட்ட 3 ஆட்டங்களுமே டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.