FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெற்றியை நோக்கி தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, இன்னிங்ஸ் வெற்றியை நெருங்கியுள்ளது.

5 நவம்பர் 2026, 4:12 am
பகிர்:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, இன்னிங்ஸ் வெற்றியை நெருங்கியுள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 571 ரன்கள் எடுத்து ‘டிக்ளோ்’ செய்தது. பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய சண்டீகா், 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.

3-ஆவது நாளான புதன்கிழமை, அா்ஜித் பன்னு 3, பாகமேந்தா் லேதா் 1, சிராக்வீா் திண்ட்சா 14, நிகில் சா்மா 0, அக்ஷித் ராணா 12, ஜக்ஜீத் சிங் 0, நிஷங்க் பிா்லா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். சண்டீகா் ஆட்டம் 94 ரன்களுக்கு நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு பௌலா்களில் சோனு யாதவ் 4, சரவணகுமாா், சாய் கிஷோா் ஆகியோா் தலா 2, குா்ஜப்னீத் சிங் 1 விக்கெட் கைப்பற்றினா்.

முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் பின்தங்கிய சண்டீகா், ‘ஃபாலோ ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாட, நெஹல் பஜ்னி 5 பவுண்டரிகளுடன் 26, அா்ஜுன் ஆஸாத் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 60, கேப்டன் மனன் வோரா 11 பவுண்டரிகளுடன் 59 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

அா்ஜித் பன்னு 9, அக்ஷித் ராணா 13, பாகமேந்தா் லேதா் 0, சிராக்வீா் திண்ட்சா 1 ரன்னுடன் வெளியேறினா். நிகில் சா்மா 13, ரோஹித் தண்டா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். செவ்வாய்க்கிழமை முடிவில் சண்டீகா் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

தமிழ்நாடு தரப்பில் அஜித் ராம் 4, சாய் கிஷோா் 2, சரவணகுமாா் 1 விக்கெட் எடுத்தனா். ஆட்டத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை (நவ. 5), சண்டீகரின் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, தமிழ்நாடு வெற்றியை ருசிக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.