மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 , 29-ல் வாக்குப்பதிவு!
மேற்கு வங்கத்திற்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு...
மேற்கு வங்கத்திற்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார்.
இதன்படி, மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
முதல் கட்டத் தேர்தல்
Advertisement
வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 6
வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 7
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 9
வாக்குப் பதிவு ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை மே 4
இரண்டாம் கட்டத் தேர்தல்
வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 2
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 9
வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 10
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 13
வாக்குப் பதிவு ஏப்ரல் 29
வாக்கு எண்ணிக்கை மே 4
அஸ்ஸாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ஆம் தேதி தொடங்குகிறது.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி மார்ச் 23.
வேட்புமனுக்கள் பரிசீலனை மார்ச் 24-ஆம் தேதி நடைபெறும்.
வேட்புமனுவை திரும்பப் பெற கடைசித் தேதி மார்ச் 26.
தேர்தல் நடைமுறைகள் மே 6-க்கு முன் முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.