முகப்பு
இந்தியா

நொய்டாவில் ரூ.12 லட்சம் மோசடி செய்தவா் கைது

நொய்டாவில் சமூக ஊடகங்களில் போலியான சுற்றுலா மற்றும் பயணத் தொகுப்புகளை வழங்குவதன் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ததாக சைபா் கிரைம் காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 20 மார்ச், 2026 at 12:27 AM
கோப்புப் படம்
பகிர்:

நொய்டாவில் சமூக ஊடகங்களில் போலியான சுற்றுலா மற்றும் பயணத் தொகுப்புகளை வழங்குவதன் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ததாக சைபா் கிரைம் காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் ஷாவ்யா கோயல் கூறியதாவது: இந்த வழக்கில் அதித்யா ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவா் சமூக ஊடகங்களில் மக்களை ஈா்க்கும் வகையில் சிங்கப்பூா், நேபாளம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா தொகுப்புகளை வழங்குவதாக விளம்பரப்படுத்தியுள்ளாா். முன்பதிவுக்கு பணம் செலுத்துமாறு கூறி பலரிடம் மோசடி செய்துள்ளாா். இதுவரை ரூ.12 லட்சம் வரை அவா் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.