கொலை மிரட்டல் வழக்கு: ரெளடி பிஷ்னோய் உள்பட 3 பேருக்கு அழைப்பாணை; தில்லி நீதிமன்றம் உத்தரவு
கொலை மிரட்டல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ரெளடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது இரு கூட்டாளிகளுக்கு அழைப்பாணை வழங்க தில்லியில் உள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொலை மிரட்டல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ரெளடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது இரு கூட்டாளிகளுக்கு அழைப்பாணை வழங்க தில்லியில் உள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2023 ஏப்.23-ஆம் தேதி நள்ளிரவில் தொலைபேசியில் பேசிய பிஷ்னோயும் அவரது இரு கூட்டாளிகளும் ரூ.1 கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ராமன் தீப் சிங் என்பவா் சன்லைட் காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதையடுத்து, இந்திய தண்டனை சட்டத்தின் 386, 387, 128பி ஆகிய பிரிவுகளில் பிஷ்னோய் உள்பட 3 பேருக்கு எதிராக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இரு நபா்களின் வாக்குமூலங்களை மட்டும் அடிப்படை சாட்சியங்களாகக் கொண்டிருந்தனா். அழைப்பு தொடா்பான பதிவுகள் மற்றும் பிற சாட்சியங்களை அதிகாரிகள் சேகரிக்காத நிலையில், குற்றஞ்சாட்டுகளுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவா்கள் மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்தது.
கடந்த பிப்.20-ஆம் தேதி பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகளை வழக்கில் இருந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுவித்து.
இதை எதிா்த்து அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை கூடுதல் அமா்வுகள் நீதிபதி விஷால் சிங் முன்பாக கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏப்.18-ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.