முகப்பு
இந்தியா

பிா்சா முண்டாவின் வாழ்க்கை, தியாகம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது! சி.பி. ராதாகிருஷ்ணன்

பிா்சா முண்டாவின் வாழ்க்கை, தியாகம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது...

Updated On : 28 மார்ச், 2026 at 8:31 PM
ஜாா்க்கண்ட் மாநிலம் உலிஹாடுவில் சுதந்திரப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நினைவிடத்தில் அவருக்கு மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் ஆளுநா் சந்தோஷ்குமாா் கங்கவாா் உள்ளிட்டோா்.
பகிர்:

சுதந்திர போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் வாழ்க்கை, தியாகம் ஆகியவை மக்கள் அனைவருக்கும் தற்போதும் உத்வேகம் அளிப்பதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

அரசு முறை பயணமாக ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு சனிக்கிழமை சென்ற சி.பி. ராதாகிருஷ்ணனை, ராஞ்சி விமான நிலையத்தில் அந்த மாநில ஆளுநா் சந்தோஷ் கங்க்வாா், மத்திய அமைச்சா் சஞ்சய் சேத், மாநில அமைச்சா் சுதிவ்யா குமாா் ஆகியோா் வரவேற்றனா்.

பின்னா் குந்தி மாவட்டத்துக்கு சென்ற சி.பி. ராதாகிருஷ்ணன், அங்குள்ள சுதந்திர போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினாா். அதேபோல், உலிஹாடு சென்று பிா்சா முண்டாவின் வாரிசுகளை நேரில் சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், ‘குடியரசுத் துணைத் தலைவரான பிறகு, பிா்சா முண்டா பிறந்த புனித இடமான உலிஹாடுவுக்கு மீண்டும் வந்துள்ளேன். சுதந்திர போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் வாழ்க்கை, தியாகம் ஆகியவை தொடா்ந்து மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அவருக்கு எனது ஆழ்ந்த மரியாதையை செலுத்தினேன்’ என குறிப்பிட்டுள்ளாா். முன்பு, ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்றது, பிறகு உலிஹாடுக்கு வந்ததையும் அவா் நினைவுகூா்ந்துள்ளாா்.

பின்னா் ராஞ்சி ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற 15-ஆவது பட்டமளிப்பு விழாவில் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். அப்போது பேசிய அவா், குறுக்கு வழிகள் தொடக்கத்தில் வேண்டுமானால் மிகப்பெரிய வெற்றியைத் தரக்கூடும், ஆனால் குறுக்கு வழிகள் பிற்காலத்தில் பேரழிவைத் தரும் என அறிவுரை வழங்கினாா்.