முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள்!

அஸ்ஸாமில் காங்கிரஸ் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை இன்று (மார்ச் 29) வெளியிட்டது.

Updated On : 29 மார்ச் 2026, 4:25 pm IST
மல்லிகார்ஜுன் கார்கே - @INCIndia
பகிர்:

அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

126 தொகுதிகளை உள்ளடக்கிய அஸ்ஸாம் பேரவைக்கு வரும் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தலைமையிலான ஆளும் பாஜக அரசுக்கெதிராகப் பல்வேறு விமர்சனங்களைச் சுமத்தியுள்ள காங்கிரஸ் இன்று (மார்ச் 29) தேர்தல் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.

லகிம்பூர் மாவட்டம், நாவோபோய்ச்சா பகுதியில் இன்றுநடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அஸ்ஸாமில் காங்கிரஸின் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Advertisement

பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிபந்தனையின்றி பணப்பரிவர்த்தனை (மாதந்தோறும்)

பெண்கள் தொழில் தொடங்க மற்றும் வணிகத்தில் ஈடுபட ரூ. 50,000 உதவித்தொகை

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சம் கட்டணமில்லா மருத்துவ காப்பீடு

மறைந்த பாடகர் ஜூபின் கார்க் மரணம் விவகாரத்தில் 100 நாள்களில் விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படும்

அஸ்ஸாம் பூர்வகுடியான 10 லட்சம் கிலோஞ்சியா மக்களுக்கு நிரந்தர நிலப் பட்டா வழங்கப்படும்

மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 1,250 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Kharge announces Cong's '5 guarantees' for Assam; pledges monthly cash transfer to women

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.