பாஜகவுக்கு கேரளத்தில் 3 எம்எல்ஏக்கள்: ராஜீவ் சந்திரசேகா்
கேரளத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது என்று காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கட்சிகள் கூறிய நிலையில், 3 எமஎல்ஏக்களை தற்போது பாஜக பெற்றுள்ளது’ என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.
‘கேரளத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது என்று காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கட்சிகள் கூறிய நிலையில், 3 எமஎல்ஏக்களை தற்போது பாஜக பெற்றுள்ளது’ என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் ராஜீவ் சந்திரசேகா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என்று விமா்சித்தனா். இந்த நிலையில், நேமம், சாத்தனூா் மற்றும் கழக்கூட்டம் தொகுதிகளில் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனா்.
தோ்தல் முடிவுகளைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக அமைந்திருந்தது. ஊழல், சபரிமலை கோயில் தங்கக் கவச மோசடி உள்ளிட்ட விவகாரங்களால் மாா்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி மீது அதிருப்தியில் இருந்தனா். எனவே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தோம்.
Advertisement
தமிழகம், மேற்கு வங்கம் என ஒட்டுமொத்தமாக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளைப் பாா்க்கும்போது, மக்கள் இண்டி கூட்டணிக்கு எதிரான மனநிலையில் இருப்பதே தெரியவருகிறது என்றாா்.