மே.வங்கத்தில் பதற்றம்! அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு வழங்கிய பாதுகாப்பு வாபஸ்!
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு வழங்கப்பட்ட காவல் திரும்பப் பெறப்பட்டுள்ளது...
மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை காவல் துறையினர் திரும்பப் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்கத்தில், முதல்முறையாக அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. இதையடுத்து, கொண்டாட்டங்களில் ஈடுபட்ட பாஜகவினர் அங்குள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை சூறையாடியுள்ளனர்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை கொல்கத்தா நகர காவல் துறையினர் இன்று (மே 6) திரும்பப் பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அபிஷேக் பானர்ஜியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஸ்கேனர்கள் மற்றும் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளை கொல்கத்தா நகர காவல் துறையினர் அகற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில், அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
In West Bengal, the police have withdrawn the security provided to the residence of Abhishek Banerjee.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.