சாலை விபத்தில் காயமடைந்த ஹரியாணா அமைச்சர்
பானிபட்டில் நடந்த விபத்தில் ஹரியாணா அமைச்சர் கிருஷ்ண லால் பன்வார் காயமடைந்தார்.
பானிபட்டில் நடந்த விபத்தில் ஹரியாணா அமைச்சர் கிருஷ்ண லால் பன்வார் காயமடைந்தார்.
ஹரியாணா மாநிலம், பானிபட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் அமைச்சர் கிருஷ்ண லால் பன்வார் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரத்தில் வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் பன்வார் எஸ்யூவி வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
விபத்து குறித்து தல்பீர் கூறுகையில், யாரோ ஒருவர் திடீரென அவரது காரை சாலையில் நிறுத்தியதால், எதிரே வந்த அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட வேண்டியிருந்தது. முன்னால் சென்ற பாதுகாப்பு வாகனம் மீது அமைச்சர் கார் மோதியதால் காரின் ஏர்பேக்குகள் விரிந்தது.
Advertisement
அமைச்சருக்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அவரது மணிக்கட்டில் வீக்கம் மற்றும் முழங்காலில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பானிபட்டில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றார். பானிபட் காவல் கண்காணிப்பாளர் பூபேந்தர் சிங், பிடிஐ-க்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், அமைச்சர் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
பானிபட் தலைமை மருத்துவ அதிகாரி விஜய் மாலிக், பிடிஐ செய்தி நிறுவனத்திடம், தலை மற்றும் முதுகெலும்பின் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றின் முடிவுகள் இயல்பாக இருந்ததாகவும் தெரிவித்தார்.