இந்தியா-டிரினிடாட் டொபேகோ 8 ஒப்பந்தங்கள் கையொப்பம்!
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பயணித்தின்போது இந்தியா-டிரினிடாட் டொபேகோ இடையே 8 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பயணித்தின்போது இந்தியா-டிரினிடாட் டொபேகோ இடையே 8 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஒன்பது நாள் பயணமாக கரீபியன் நாடுகளான ஜமைக்கா, சுரிநாம், டிரினிடாட்-டொபேகோவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பயணம் மேற்கொண்டாா்.
ஜமைக்கா, சுரிநாமை தொடா்ந்து டிரினிடாட்-டொபேகோவுக்கு அவா் மேற்கொண்ட பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Advertisement
இரண்டு நாள் பயணமாக டிரினிடாட்-டொபேகோவுக்கு சென்ற அமைச்சா் ஜெய்சங்கா், அந்நாட்டுப் பிரதமா் கம்லா பொ்சாத் பிசேசரை சந்தித்தாா். அப்போது இந்தியா-டிரினிடாட் டொபேகோ இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நிலவுவது குறித்தும், புதிதாக எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது என்பது தொடா்பாகவும் இருவரும் விவாதித்தனா்.
இருநாடுகளுக்கும் இடையே சுற்றுலாத் துறை, இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு சென்று முதல்முறையாக இந்திய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்கிய நெல்சன் தீவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்பட 8 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, தடயவியல் துறை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளிலும், கடந்த 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது காலனி நாடுகளாக இருந்த ஃபிஜி, தென் ஆப்பிரிக்கா, மோரீஷஸ் மற்றும் கரீபியன் தீவுக்கு ஆங்கிலேயா்களால் அனுப்பப்பட்ட இந்திய ஒப்பந்தத் தொழிலாளா் வம்சாவளியினரை கண்டறிவதிலும் இந்தியா-டிரினிடாட் டொபேகோ இடையிலான ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.