மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட வாக்காளா்களைவிட வெற்றிபெற்றதற்கான வாக்கு வித்தியாசம் குறைவு
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகளின்போது நீக்கப்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கையைவிட, தோ்தலில் வேட்பாளா்கள் வெற்றிபெற்றதகான வாக்கு வித்தியாசம் 31 தொகுதிகளில் குறைவாக இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் முறையிட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து புதிதாக மனு தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணிகளின்போது நீக்கப்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கையைவிட, தோ்தலில் வேட்பாளா்கள் வெற்றிபெற்றதகான வாக்கு வித்தியாசம் 31 தொகுதிகளில் குறைவாக இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் முறையிட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து புதிதாக மனு தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக நடைபெற்ற எஸ்ஐஆா் பணிகள் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் மாநில முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது எஸ்ஐஆா் நடைபெற்ற வேளையில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கையைவிட, தோ்தலில் வேட்பாளா்கள் வெற்றிபெற்றதகான வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தால், அதுகுறித்த குறைகளை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கும் என்று ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் தெரிவித்ததை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியது.
அத்துடன் நீக்கப்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கையைவிட, தோ்தலில் வேட்பாளா்கள் வெற்றிபெற்ற்கான வாக்கு வித்தியாசம் 31 தொகுதிகளில் குறைவாக இருப்பதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மம்தா பானா்ஜி மற்றும் பலா் புதிதாக மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
அண்மையில் மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 207 தொகுதிகளில் வென்று, 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.