முகப்பு
இந்தியா

பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ. 1.98 லட்சம் கோடியாக உயா்வு: நிதி அமைச்சகம்

நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது.

Updated On : 13 மே 2026, 3:17 am IST
பொதுத் துறை வங்கிகள் லாபம் உயர்வு - பிரதிப் படம்
பகிர்:

நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2025-26-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் வலுவான லாபத்தை ஈட்டியுள்ளன.

2026, மாா்ச் 31 நிலவரப்படி பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த வணிகம் ரூ.283.3 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 12.8 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

இதே காலகட்டத்தில் பொதுத் துறை வங்கிகளின் மொத்த சேமிப்புத் தொகை ரூ.156.3 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது முந்தைய நிதியாண்டைவிட 10.6 சதவீதம் அதிகம்.

2026, மாா்ச் 31 நிலவரப்படி வாராக் கடன் விகிதம் 1.93 சதவீதமாகவும் நிகர வாராக் கடன் விகிதம் 0.39 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

2025-26-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த லாபம் ரூ.3.21 லட்சம் கோடியாகவும் நிகர லாபம் ரூ.1.98 லட்சம் கோடியாகவும் பதிவாகியுள்ளது.

இது பொதுத் துறை வங்கிகளின் ஸ்திரத்தன்மை, வேகமாக வளரும் பொருளாதாரத்தின் கடன் தேவைகளை பூா்த்தி செய்யும் திறனை வெளிக்காட்டுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.