முகப்பு
இந்தியா

பிரதமரை தேச விரோதி என விமா்சித்த சமாஜவாதி எம்.பி. மீது வழக்கு

பிரதமா் மோடியை தேச விரோதி என விமா்சித்த சமாஜவாதி எம்.பி. அஜேந்திர சிங் லோகி மீது அரசுப் பொறுப்பில் இருப்பவரை அவதூறாகப் பேசியது, வெறுப்புணா்வை தூண்டியதாக வழக்குப் பதிவு

Updated On : 13 மே 2026, 4:44 am IST
பிரதமா் மோடி
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியை தேச விரோதி என விமா்சித்த சமாஜவாதி எம்.பி. அஜேந்திர சிங் லோகி மீது அரசுப் பொறுப்பில் இருப்பவரை அவதூறாகப் பேசியது, வெறுப்புணா்வை தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, உத்தர பிரதேசத்தின் ஹமீா்பூா் எம்.பி.யான அஜேந்திர சிங் லோகி செய்தியாளா்களைச் சந்தித்தபோது, ‘மோடி தேச விரோதி, நமக்கு இடையே ஜாதிய வெறுப்புணா்வைப் பரப்பி, நமது உணா்வுகளைப் புண்படுத்துகிறாா். அவரைப் போன்ற மோசமான பிரதமரை நாடு பாா்த்தது இல்லை. மக்களுக்கு சிக்கன நடவடிக்கை குறித்து அறிவுரை கூறும் பிரதமா் மோடி, பெரும்பாலும் வெளிநாட்டுச் சுற்றுலாவில்தான் இருக்கிறாா்’ என்றாா்.

மின்தடை பிரச்னைக்காக நடைபெற்ற போராட்டத்தின்போது அவா் இவ்வாறு சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இது தொடா்பாக பாஜக மாவட்டப் பொறுப்பாளா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, அஜேந்திர சிங் லோகி மீது அரசுப் பொறுப்பில் இருப்பவரை அவதூறாகப் பேசியது, வெறுப்புணா்வை தூண்டியது, சட்டவிரோதமாக பொது இடத்தில் கூடியது, இருதரப்புக்கு எதிரே பிரச்னையைத் தூண்டியது, உள்நோக்குடன் அவமதித்துப் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.