முகப்பு
இந்தியா

அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியிடப்பட்டுள்ளது.

அக்னிவீரர்கள் தேர்வு - ENS
பகிர்:

அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்வதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கான, இந்திய ராணுவத்தின் அக்னிவீரர் அனுமதி அட்டை- 2026 வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்திருந்தவர்கள், joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்துக்கு அக்னிவீரர்கள் 2026 நுழைவுத் தேர்வு ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறவிருக்கிறது.

Advertisement

Advertisement

இந்த தேர்வானது, அக்னிவீரர்கள் பொதுப் பணி, தொழில்நுட்பம், வணிகப் பிரிவு, பெண்கள் ராணுவ காவல்துறை மற்றும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பதவியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.

அனுமதி அட்டையை பதவிறக்கம் செய்ததும், அதில் உள்ள விண்ணப்பதாரரின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும். பிறகு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை, ஏதேனும் பிழைகள் இருந்தால் உரிய அதிகாரிகளை தொடர்புகொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

டவுன்லோடு செய்வது எப்படி?

முதலில் joinindianarmy.nic.in இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

முகப்புப் பக்கத்தில் அட்மிட் கார்டு என்ற வாய்ப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.

லாகின் செய்ய வேண்டும்.

அதில், அக்னிவீரர் நுழைவுச் சீட்டு அனுமதி என்று இருக்கும். அதை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும்.

பிரிண்ட்-அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேர்வு முடிந்து, அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படும்வரை, விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து இந்த இணையதளத்தை அவ்வப்போது பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

summary

The admit card for the Agni Veer Common examination in the Indian Army has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments