அரபு அமீரகம் புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம்!
பிரதமர் மோடியின் சுற்றுப் பயணம் பற்றி...
5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.
இன்று முதல் மே 20 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அவா், அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயானை சந்திக்கிறார். இதைத்தொடா்ந்து நெதா்லாந்து, ஸ்வீடன் செல்லும் அவா், அந்நாட்டுப் பிரதமா்களை சந்திக்க உள்ளாா்.
Advertisement
Advertisement
அதன் பின்னா் நாா்வே செல்லும் அவா், 3-ஆவது இந்தியா-நாா்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளாா். அந்நாட்டுக்கு 43 ஆண்டுகளுக்குப் பின்னா் செல்லும் முதல் இந்திய பிரதமா் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடா்ந்து அவா் இத்தாலி செல்கிறாா்.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக மேற்காசிய நாடுகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், பிரதமர் மோடியின் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PM Narendra Modi Departs for UAE! Five-Nation Tour!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.