சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!
கேரள முதல்வர் வி.டி. சதீசன் பதவியேற்பில் தனது சாதிப் பெயரைக் குறிப்பிட்டது குறித்து...
கேரளத்தில், சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்ற முதல்வர் வி.டி. சதீசன் மீண்டும் சாதிப் பெயருடன் கூடிய தனது முழுப் பெயரைக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கேரளத்தின் முதல்வராக, கடந்த மே 18 அன்று பதவியேற்ற வி.டி. சதீசன், பதவிப் பிரமாணத்தின் போது வடசேரி தாமோதர மேனன் சதீசன் எனும் தனது முழுப் பெயரைக் கூறி பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பதவிப் பிரமாணத்தில் மேனன் எனும் சாதிப் பெயரை முதல்வர் சதீசன் பயன்படுத்தியதற்கு, காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
Advertisement
Advertisement
இதுபற்றி, செய்தியாளர்களுடன் பேசுகையில் முதல்வர் சதீசன் கூறியதாவது:
“என் தந்தையின் பெயரை நான் குறிப்பிட்டால் அது ஏன் தவறாகத் தெரிகிறது” எனக் கூறினார். மேலும், தனது தாயாரின் பெயரையும் குறிப்பிட விரும்புவதாகவும்; ஆனால், அதற்கு வழியில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இன்று (மே 21) பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.
அப்போது, தொடர்ந்து 6 ஆவது முறையாக பரவூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்ட முதல்வர் சதீசன் மீண்டும் சாதிப் பெயருடன் கூடிய தனது முழுப் பெயரைக் கூறி பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். முதல்வரின் இந்தச் செயல் இணையவெளியில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, பரவூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றபோது தனது பெயரை “வி.டி. சதீசன்” என்று மட்டும் குறிப்பிட்டு அவர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
In Kerala, CM V.D. Satheesan has sparked a controversy by once again stating his full name including his caste name while being sworn in as a MLA.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.