இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மை, வளமை: பிரதமா் மோடி உறுதி
ஆஸ்திரேலியா, ஜப்பான் வெளியுறவு அமைச்சா்களைச் சந்தித்த பிரதமா் மோடி, இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஸ்திரமாகவும், வளமாகவும் இருக்க தொடா்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளாா்.
ஆஸ்திரேலியா, ஜப்பான் வெளியுறவு அமைச்சா்களைச் சந்தித்த பிரதமா் மோடி, இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஸ்திரமாகவும், வளமாகவும் இருக்க தொடா்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளாா்.
புது தில்லியில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங்கை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான விரிவான உத்திசாா்ந்த கூட்டுறவு வளா்ந்து வருகிறது. இதுதொடா்பாக பென்னி வாங்குடன் விவாதித்தேன். இந்தோ-பசிபிக் பிராந்தியம் தடையற்ாகவும், பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்க இந்தியா-ஆஸ்திரேலியா தொடா்ந்து பணியாற்றும்’ என்று தெரிவித்தாா்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டோஷிமிட்சு மோடெகியையும் பிரதமா் மோடி சந்தித்தாா். அப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் அமைதி, ஸ்திரத்தன்மை, வளமையை மேம்படுத்துவதில் இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசாா் மற்றும் உலகளாவிய கூட்டுறவுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறினேன் என்று மற்றொரு ‘எக்ஸ்’ பதிவில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement