முகப்பு
குழந்தைகள் உலகம்

வரைந்து பார்!

படங்கள் வரையும் பழக்கம் பயன்கள் பலவும் தந்திடும்!

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 4:05 AM
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:51 PM

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

படங்கள் வரையும் பழக்கம்

பயன்கள் பலவும் தந்திடும்!

Advertisement

விடாமல் விடாமல் பழகிடின்

உணர்வாய் அவற்றை நீயுமே!

-

எழுதும் எழுத்து யாவும்

அதனால் அழகாய் மாறும்!

எழுத்தில் அழகு நிலைத்தால்

அடைவாய் சிறப்பும் பலவுமே!

-

உள்ள எண்ணம் ஒன்றாகும்

உனது செயல்களும் சிறப்பாகும்!

துள்ளும் கற்பனை உனக்காகும்

வரையும் வடிவமும் பலவாகும்!

-

எந்தப் பொருள்கள் என்றாலும்

உனது பார்வை கூராகும்!

அந்தப் பொருளின் வடிவங்கள்

உயிருடன் தோன்றும் படமாகும்!

-

உலகப் புகழை எய்தினால்

யாவரும் இவ்வழி பயின்றார்

பலவாய் அவரின் படங்கள்

பாரில் புகழுற உயர்ந்ததே!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.