குழந்தைகள் உலகம்

நீதிக் கதைகள்! இரக்கமுள்ள இதயமே கடவுளின் இருப்பிடம்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

இணையதளச் செய்திப் பிரிவு

மகான் ஒருவர் காட்டில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் அக்கரைக்குப் போக நினைத்தார். ஆற்றோரம் ஒரு படகு இருந்தது. அதில் படகோட்டியும் இருந்தான்.

மகான் படகில் ஏறினார். ஆறு மிக அகலமாகவும் ஆழமாகவும் இருந்தது. படகைச் செலுத்திக் கொண்டிருந்த படகோட்டி, மகானிடம், "ஐயா!.... கடவுள் எங்கே இருக்கிறார்?.... அவரை எனக்குக் காட்ட முடியுமா?'' என்று கேட்டான்.

மகான் அவனைப் பார்த்துப் புன்னகையுடன், "கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் அப்பா!..... அவர், இரக்கம், தயை, கருணை, அன்பு முதலிய குணங்களில் இருக்கிறார்.... இதோ!.... என் எதிரே இருக்கும் உன்னிடம்கூட நான் கடவுளைப் பார்க்கிறேன்!'' என்றார்.

படகோட்டிக்குப் புரியவில்லை. விழித்தான். அவனது குழப்பமடைந்த முகத்தைப் பார்த்த மகான், "நேரம் வரும்போது புரியும்!'' என்றார்.

படகு ஆழமான பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது நல்ல மழை!.... திடீரென காற்றும் பலமாக வீசியது. படகு ஆட்டம் காண ஆரம்பித்தது. படகு கவிழ்ந்தே விட்டது!.....

மகானுக்கு நீச்சல் தெரியாது!.... அவர் படகிலிருந்து தவறி நீருக்குள் முழுகினார்!.... படகோட்டிக்குப் பதைபதைப்பாகிவிட்டது! உடனே அவன் நீரில் பாய்ந்தான். படகோட்டிக்கு நீச்சலில் திறமை அதிகம்! அனுபவமும் அதிகம்!.... மகானைக் காப்பாற்றி பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டான்.

மகான் கண்விழித்துப் பார்த்துவிட்டு, படகோட்டியிடம், "மகனே!..... இப்போது புரிகிறதா?... உன் மனதில், நான் "எப்படிப் போனாலும் பரவாயில்லை'.... என நினைக்காமல், இரக்கத்தினால் நீரில் குதித்து என்னைக் காப்பாற்றியிருக்கிறாய்!.... அந்த இரக்க குணமே கடவுள்!....

பிறர் துன்பத்தைச் சகியாதவனிடத்திலும், இரக்கமுள்ள இதயங்களிலும், உயிர்களிடம் அன்பு கொண்டவர்களிடத்திலும் கடவுள் வசிக்கிறார்.... உன்னுள் இருக்கும் இரக்க சிந்தனையைத்தான் நாம் கடவுள் என்கிறோம்!....'' என்றார்.

இரக்கமுள்ள இதயமே கடவுளின் இருப்பிடம்!

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் எளிதாக நடைமுறைப்படுத்த ஏதுவானதா?

தமிழக அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! அரசாணை வெளியீடு!

டி20-யில் ஆட்ட நாயகனான டெஸ்ட்டில் ஓய்வு பெற்ற உஸ்மான் கவாஜா!

தமிழ்த் தீ பரவியதா? பராசக்தி - திரை விமர்சனம்!

தெறி ரீ-ரிலீஸ்!

SCROLL FOR NEXT