முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை மறுநாள் இலங்கை செல்கிறது நிவாரணக் கப்பல்

திருவொற்றியூர், ஜூலை 5: இலங்கைக்கு நிவாரணப் பொருள்களுடன் சென்னையில் இருந்து புதிய கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) புறப்படுகிறது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண பொருள்களை

Updated On : 20 செப்டம்பர் 2012, 4:42 pm IST
பகிர்:



திருவொற்றியூர், ஜூலை 5: இலங்கைக்கு நிவாரணப் பொருள்களுடன் சென்னையில் இருந்து புதிய கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) புறப்படுகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்குவதற்காக, இக்கப்பல் கடந்த ஏப்ரல் 20-ல் பிரிட்டனிலிருந்து தனது பயணத்தை துவக்கியது. ஜூன் 4-ல் இலங்கை கடல் பகுதியில் நுழைந்த இக்கப்பலை அந்நாட்டு ராணுவத்தினர் சிறை பிடித்தனர். பின்னர் விடுவித்து உடனே வெளியேறும்படி உத்தரவிட்டதை அடுத்து சர்வதேச கடல் எல்லையில் நின்றது.

கடந்த ஜூன் 14 முதல் இந்திய கடல் எல்லையில் நிறுத்தப்பட்ட இக்கப்பல் கடந்த வியாழக்கிழமைதான் சென்னை துறைமுகத்தில் நுழைய அனுமதி கிடைத்தது.

சரக்குகள் முழுவதும் இறக்கப்பட்டதை அடுத்து "கேப்டன் அலி' கப்பல் ஞாயிற்றுக்கிழமை காலை 5.20 மணிக்கு சென்னையிலிருந்து கோல்கத்தா புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.