முகப்பு
தற்போதைய செய்திகள்

கைசிக ஏகாதசி: காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் ஸேவை

காரைக்கால், டிச. 7: கைசிக ஏகாதசி விழாவையொட்டி பக்தர்களின் கைத்தல ஸேவையாக காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். கார்த்திகை மாத ஏகாதசியில் வராகப் பெருமாள் பூமிப் பிர

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:21 PM
பகிர்:

காரைக்கால், டிச. 7: கைசிக ஏகாதசி விழாவையொட்டி பக்தர்களின் கைத்தல ஸேவையாக காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

கார்த்திகை மாத ஏகாதசியில் வராகப் பெருமாள் பூமிப் பிராட்டிக்கு அருளிச் செய்தது கைசிக மாகாத்மியம் (புராணம்). நம்பாடுவான் என்ற பக்தருக்கு கைசிக பண்ணில் (ராகம்), திருக்குருங்குடி என்ற திவ்யதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியே ஒவ்வொரு ஆண்டும் ஏகாதசி இரவு தொடங்கி மறுநாள் துவாதசி அதிகாலை வரை கைசிக ஏகாதசியாக நடத்தப்படுகிறது.

புகழ்பெற்ற காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை நடத்தப்பட்டது. இதையொட்டி உ.வே.கு. அரங்கநாதாச்சாரியார் கைசிக புராணம் வாசிக்க, உத்ஸவரான ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தர்களின் கைத் தாங்கலாக (கைத்தல சேவை) பிராகார வலம் வந்தார்.

சந்நிதியில் பெருமாளுக்கு கண்ணாடி சேவையும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை வழிபட்டனர். முன்னதாக மூலவரான சயனநிலை ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளுக்கும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.  

முழு கட்டுரையைப் படிக்க →