கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமத் ஜெயந்தி
கடையநல்லூர்,டிச.24: கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஹனுமத் ஜெயந்தி உற்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசன
கடையநல்லூர்,டிச.24: கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஹனுமத் ஜெயந்தி உற்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இவ்விழா கடந்த 19 ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகளும், யாகங்களும்,சொற்பொழிவுகளும் நடைபெற்றன. டிச.23 ஆம் தேதி காலை 6 மணி முதல் 24 ஆம் தேதி காலை 6 மணி வரை அகண்ட ராம நாப ஜெப பாராயணம் நடைபெற்றது. 23 ஆம் தேதி இரவு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான அனுமத் ஜெயந்தி சனிக்கிழமை நடைபெற்றது.
அனுமத் ஜெயந்தியை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட தொலைவிற்கு வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அகில உலக ஆஞ்சநேயதாசர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.