அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: எம்பி கவலைக்கிடம்; 6 பேர் பலி
டக்ஸன், அரிஸோனா ஜன.9: அமெரிக்கா அரிஸோனா மாகாணத்தின் டக்ஸனில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டதில் ஜனநாயகக் கட்சி எம்பியான கேப்ரியல் கிஃப்பர்ட்ஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். 9 வயது சிறுமி உள்ளிட்ட 6
டக்ஸன், அரிஸோனா ஜன.9: அமெரிக்கா அரிஸோனா மாகாணத்தின் டக்ஸனில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டதில் ஜனநாயகக் கட்சி எம்பியான கேப்ரியல் கிஃப்பர்ட்ஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். 9 வயது சிறுமி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கியால் சுட்டவர் ஜரீத் லீ லானர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறிய ஷெரீப் கிளாரன்ஸ் டுப்னிக், போலீஸ் விசாரணையின்போது அவர் எதுவும் கூறவில்லை என்றார்.
இந்த இடத்துக்கு அவர் வந்ததற்கு ஏதாவது காரணம் இருக்கும் என நம்பப்படுவதாக ஷெரீப் கூறினார்.
இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கிஃப்பர்ட்ஸ் முதலில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. எனினும் மூளையின் ஒருபகுதியில் குண்டு பாய்ந்திருந்தாலும் அவரைக் காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் உள்ளார். எனினும் அவரைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தலைவர் பீட்டர் ரீ தெரிவித்தார்.