புரட்சியில் ஈடுபட மாவோயிஸ்டுகள் திட்டம்: நேபாளப் பிரதமர்
காத்மாண்டு, ஜன.9- நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் புரட்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் மாதவ் நேபாள் கூறியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் அமைதி நடவடிக்கைகளை கண்காணித்து
காத்மாண்டு, ஜன.9- நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் புரட்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் மாதவ் நேபாள் கூறியுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் அமைதி நடவடிக்கைகளை கண்காணித்து வரும் ஐநா குழு நேபாளத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. மேலும், நேபாளத்தில் அரசியல் குழப்ப நிலை நீடிக்கிறது.
இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான "யுசிபிஎன்-மாவோயிஸ்டுகள்" ஜனநாயகத்தை முடக்கும் வகையில் புரட்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவலை நேபாள அரசு செய்தி நிறுவனமான ராஷ்ட்ரீய சமாச்சார் சமிதி தெரிவித்துள்ளது.