8 ஆம் வகுப்பு தனித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் இளைஞர்கள் குழப்பம்
கடையநல்லூர்,நவ.9: 8 ஆம் வகுப்பு தனித்தேர்வு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. தற்பொழுது பேட்ஜ்ஜூடன் கூடிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 8 ஆம் வகுப்பு த
கடையநல்லூர்,நவ.9: 8 ஆம் வகுப்பு தனித்தேர்வு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
தற்பொழுது பேட்ஜ்ஜூடன் கூடிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் ஏராளமான இளைஞர்கள் 8 ஆம் வகுப்பினை தனிப்பயிற்சி கல்லூரிகள் மூலம் எழுதி வருகின்றனர்.இந்நிலையில் இந்த ஆண்டு 8 ஆம் வகுப்பிற்கான தனித்தேர்வு தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தாயகம் மாணவர் இயக்க பொதுச்செயலர் சந்திரசேகர் கூறியதாவது:
பொதுவாக அக்டோபர் மாத துவக்கத்தில் 8 ஆம் வகுப்பு தனித்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.ஆனால் நடப்பு ஆண்டில் இது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில குறிப்பிட்ட பணிகளுக்கு கண்டிப்பாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையுள்ளதால் கல்வித்துறை இது தொடர்பான அறிவிப்பினை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.