திருப்பூர், நவ.9: திருப்பூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அமைச்சர்களின் நேரடி மேற்பார்வையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீடுகளை இழந்தோருக்கு விரைவில் மறு வீடுகள் வேறு இடங்களில் கட்டிக் கொடுக்க பரிந்துரை செய்யப்படும். தற்போது மீட்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.