கடல் சீற்றத்தால் காரைக்காலில் 4 பைபர் படகுகள் சேதமடைந்ததாக புகார்
காரைக்கால், நவ. 25 : கடல் சீற்றம் காரணமாக காரைக்கால்மேடு கிராம கடலோரத்தில் நிறுத்திவைத்திருந்த 4 பைபர் படகுகள் சேதமடைந்துவிட்டதாக மீனவர்கள் கூறினர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தங்களது பைபர
காரைக்கால், நவ. 25 : கடல் சீற்றம் காரணமாக காரைக்கால்மேடு கிராம கடலோரத்தில் நிறுத்திவைத்திருந்த 4 பைபர் படகுகள் சேதமடைந்துவிட்டதாக மீனவர்கள் கூறினர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை அந்தந்த கிராமங்களின் கடலோரத்தில் வரிசையாக நிறுத்திவைக்கின்றனர்.
கடந்த 5 நாள்களாக தொடர்ந்து நீடித்துவரும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் அனைவரும் ஒருசேர கடலுக்குள் செல்லவில்லை. வியாழக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் கூடிய மழை பெய்தது. மேலும் கடல் அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது.
இதனால் காரைக்கால்மேடு கிராமத்தில் வரிசையாக நிறுத்திவைத்திருந்த படகுகள் அலையால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. ஒருசில படகுகள் வெவ்வேறு பகுதியில் தூக்கி வீசப்பட்டும், கவிழ்ந்த நிலையிலும் கிடந்தது. வெள்ளிக்கிழமை காலை மழை சற்று ஓய்ந்த நிலையில், படகுகளை பார்க்கச் சென்ற மீனவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
சுமார் 4 பைபர் படகுகள் ஒன்றுக்கொண்டு மோதிக்கொண்டதில் படகு உள்வாங்கியுள்ளது. இதனை கடலுக்கு எடுத்துச்சென்றால் தண்ணீரில் ஊறிப்போய், ஓட்டை விழுந்து தண்ணீர் படகுகள் புகுந்துவிடுமென மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் படகில் பாதுகாப்பாக வைத்திருந்த வலைகளும் தூக்கி வீசப்பட்டதுபோன்று வேறு இடத்தில் கிடந்தது. படகின் விலை ரூ.1.20 லட்சம் என்றும், பாதிப்புக்குள்ளான படகுகளை மீண்டும் கடலுக்குள் எடு்த்துச் செல்ல இயலாது. மீனவர்களுக்கு புதுவை அரசு உதவி செய்யவேண்டும். இதுகுறித்து மீன்வளத்துறையிடம் புகார் தெரிவிக்கவுள்ளோம் என்றனர் காரைக்கால்மேடு மீனவர்கள்.