முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூரில் அடையாள அட்டை பிரச்னை: வேட்பாளர்கள், முகவர்கள் மறியல்

திருக்கோவிலூர், அக். 20: திருக்கோவிலூரில் அடையாள அட்டை கேட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் திடீரென சாலை மறியலில் (படம்) வியாழக்கிழமை ஈடுபட்டனர். திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு 2 மாவட

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:52 PM
பகிர்:

திருக்கோவிலூர், அக். 20: திருக்கோவிலூரில் அடையாள அட்டை கேட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் திடீரென சாலை மறியலில் (படம்) வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 51 ஊராட்சித் தலைவர் பதவிக்கும், 350-க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கும் திங்கள்கிழமை தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திருக்கோவிலூர் ஸ்ரீவித்யாமந்தீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதையடுத்து மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு 12 முகவர்களும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு 3 முகவர்களும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு 1 முகவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் சம்மந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அதிகாலை 5 மணிக்கு செல்லவேண்டும். ஆனால் வியாழக்கிழமை 4 மணி வரையில் வாக்கு எண்ணிக்கை அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்து, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் திடீரென திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின் தகவலறிந்து தாசில்தார் பெ.பார்வதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கீகரிக்கப்பட்ட அனைவருக்கும் வாக்கு எண்ணிக்கை முகவர் அடையாள அட்டை உடன் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு தாசில்தார் பெ.பார்வதி கேட்டுக்கொண்டதின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

இந்த மறியலால் திருக்கோவிலூர்-ஆசனூர் பிரதானச் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →