முகப்பு
தற்போதைய செய்திகள்

வீண் வதந்தியால் 1 லட்சம் தேங்காய் நாசம்

திருக்கோவிலூர், செப். 21: திருக்கோவிலூர் பகுதியில் பசு மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக கிளம்பிய வதந்தியால், வீட்டு வாசலில் வெற்றிலை பாக்கு வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பொதுமக்கள் புதன்கிழமை

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:35 PM
பகிர்:

திருக்கோவிலூர், செப். 21: திருக்கோவிலூர் பகுதியில் பசு மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக கிளம்பிய வதந்தியால், வீட்டு வாசலில் வெற்றிலை பாக்கு வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பொதுமக்கள் புதன்கிழமை வழிப்பட்டனர்.

 திருக்கோவிலூரை அடுத்த அரியலூர் கிராமத்தில் செவ்வாய்கிழமை நள்ளிரவு பசு மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக புதன்கிழமை தகவல் பரவியது. இதையடுத்து அரியலூர் கிராமத்துக்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் படையெடுத்தனர்.

அங்கு அப்பயொரு சம்பவமே ஏற்படவில்லை என்று அக்கிராம மக்கள் உறுதியாக தெரிவித்தனர். இதுபோல் கிராமம் கிராமமாக பொதுமக்கள் தேடி அலைந்தனர். அதன்பின் இச்சம்பவம் வதந்தி என்பது தெரியவந்தது.

 இதற்கிடையில் பசுவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து நேரிடும் என்று பீதி கிளம்பியது.

 இதனால் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த எடையூர், பழைய சிறுவங்கூர், ஜம்படை, பாடியந்தல், திம்மச்சூர், கோளப்பாறை, நெடுமுடையான், தனகனந்தல் உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் வீட்டு வாசலில் வெற்றிலை பாக்கு வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பெண்கள் வழிப்பட்டனர்.

 இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, 1 லட்சத்துக்கும் மேல் தேங்காய் நாசமானது குறிப்பிடத் தக்கது.     

முழு கட்டுரையைப் படிக்க →