முகப்பு
தற்போதைய செய்திகள்

அலட்சியத்தால் உள்வாங்கிய பாலம்: திருக்கோவிலூரில் மக்கள் அவதி

திருக்கோவிலூர், செப்.24: திருக்கோவிலூரில் மிக முக்கியப் பாலம் ஒன்று அதிகாரிகளின் அலட்சியத்தால் உடைப்பெடுத்துள்ளது. திருக்கோவிலூரின் மிக முக்கியமான துரிசலாற்றுப் பாலம் இன்று தானாகவே உடைப்பு எடுத்தது. இ

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:36 PM
பகிர்:

திருக்கோவிலூர், செப்.24: திருக்கோவிலூரில் மிக முக்கியப் பாலம் ஒன்று அதிகாரிகளின் அலட்சியத்தால் உடைப்பெடுத்துள்ளது.

திருக்கோவிலூரின் மிக முக்கியமான துரிசலாற்றுப் பாலம் இன்று தானாகவே உடைப்பு எடுத்தது. இதை அடுத்து தரைப்பாலத்தின் வழியே போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர் முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் பாதையில் இந்தப் பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியே வேட்டவலம், கண்டாச்சிபுரம், செஞ்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம். போக்குவரத்து உள்ள இந்தப் பாலம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்புப் பாலம். ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக பழுது அடைந்து காணப்பட்டதால், இந்தப் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஓராண்டுக்கு முன்பு புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனாலும், பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், பாலம் கவனிப்பாரற்று இருந்தது. அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் இந்தப் பாலம் இன்று திடீரென்று தானாகவே உடைப்பு எடுத்துள்ளது. இதையடுத்து, பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தரைப்பாலத்தின் வழியே திருப்பிவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →