திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்எல்ஏ பாலபாரதி உண்ணாவிரதம்
திண்டுக்கல், ஆக., 1 : திண்டுக்கல் மாவட்டம் பிடபுள்இ காலனியில் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார்
திண்டுக்கல், ஆக., 1 : திண்டுக்கல் மாவட்டம் பிடபுள்இ காலனியில் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். இந்நிலையில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர், காவல்துறைக்கு சொந்தமான இடம் என்று கூறி சாலை அமைக்க அனுமதி மறுப்பதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி திண்டுக்கல் மாவட்ட ஆடசியர் அலுவலகம் முன்பு இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் என். பாண்டி, நகரச் செயலாளர் ஆசாத், ஒன்றியச் செயலாளர் அஜய் கோஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.