முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சி அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை

பொள்ளாச்சி, ஆக.3: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் கைத்தறி ஆலையில் வேலை செய்து வருபவர் கருப்புவேல் ஐயப்பன். இவர், நேற்று ஆடிப் பெருக்கு விழாவுக்காக தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் இரவ

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:21 PM
பகிர்:

பொள்ளாச்சி, ஆக.3: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் கைத்தறி ஆலையில் வேலை செய்து வருபவர் கருப்புவேல் ஐயப்பன். இவர், நேற்று ஆடிப் பெருக்கு விழாவுக்காக தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினார்.  அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். வீட்டில்  

பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை, 1/2 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதை அடுத்து போலீஸில் புகார் அளித்தார். கோட்டூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.