முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை கிரானைட் குவாரி சோதனை: பி.ஆர்.பி. நிறுவன கட்டுமானம் அகற்றம்

மேலூர், ஆக.3: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகளில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலூர் கீழவளவு பகுதியில் மேற்கொள்ளப் பட்ட

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:21 PM
பகிர்:

மேலூர், ஆக.3: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகளில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலூர் கீழவளவு பகுதியில் மேற்கொள்ளப் பட்ட சோதனைகளில் பி.ஆர்.பி நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 2 1/4 ஏக்கர் பரப்பளவிலான பணிமனை ஷெட் அப்புறப்படுத்தப்பட்டது.

கீழவளவில் உள்ள பிள்ளையார்குளம் ஊரணியில் தமிழ்நாடு அரசு நிறுவனமான டாமின் நிறுவனம் கனிமங்களைத் தோண்டி எடுக்க பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் கொடுத்திருந்தது. இந்நிலையில், பி.ஆர்.பி. காண்ட்ராக்ட் எடுத்திருந்த இடத்தில் இருந்து டாமின் நிறுவனத்துக்குத் தெரியாமல் ஏமாற்றி கிரானைட் கற்களை முறைகேடாக எடுத்ததும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து, இவர்கள் அமைத்திருந்த ஷெட்கள், 2 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டு, அனைத்து கட்டுமானங்களும் அப்புறப்படுத்தப் பட்டன. இந்த சோதனை மேலும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →