முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்கராபுரம் சாலையில் தேரோட்ட அனுமதி கேட்டு சாலைமறியல்

திருக்கோவிலூர், ஆக.6: சங்கராபுரம் பொதுச் சாலையில் தேரோட்டம் நடத்த அனுமதி கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் பேருந்து நிலை

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:24 PM
பகிர்:

திருக்கோவிலூர், ஆக.6: சங்கராபுரம் பொதுச் சாலையில் தேரோட்டம் நடத்த அனுமதி கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகே சாலைமறியல் நடந்ததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சங்கராபுரம் அடுத்த கேசசமுத்திரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் இதுவரை தேரோட்டம் போன்ற பெரிய விழாக்கள் நடைபெறவில்லை. தேரோட்டத்துக்கு பதிலாக கட்டை வண்டி போன்ற வாகனத்தில்தான் இதுவரை அம்மன் வீதியுலா நடந்து வந்தது.

இந்தக் கிராமத்தில் இரு தரப்பு சமூக மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது சாலை ஒன்று உள்ளது. இந்தப் பொதுச் சாலையில் இந்த மாரியம்மன் கோயிலின் விழா ஊர்வலம், வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த இதுவரை எந்த எதிர்ப்பையும் மற்ற சமூக மக்கள் எழுப்பவில்லை. இந்த நிலையில், இந்த வருடம் ஆதி திராவிட மக்கள் பகுதியின் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர்கள், 25 அடி அளவுக்கு தேர் ஒன்றைச் செய்திருக்கிறார்கள். அந்தத் தேரோட்டம் பொதுச் சாலையில் செல்ல முயன்றபோது, அதைத் தடுத்த மற்ற சமூகத்தினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை பால்குட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து வந்த போது, அந்த வழியில் டிராக்டரை நிறுத்தி, சாலையைத் தடுத்து, ஊர்வலத்தையும் திருப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, முறையிட்டனர். இதில், நடந்த அமைதிக் கூட்டத்தில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலும், தேருக்கான உரிமம் பதிவு செய்யப்படாததாலும் தேரோட்டம் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை வழக்கமான ஊர்வலங்கள், பால்குட ஊர்வலம் உள்ளிட்டவை நடந்துள்ளது. இடையில் இதனை எப்படி தடை செய்யலாம் என்று கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்பட அந்தப் பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அதுவரை தாங்கள் கலைந்து செல்லப் போவதில்லை என்றும் கூறினர். இடையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் ஆர்.டி.ஓ., வராததால், வேறு வழியின்றி, ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்றனர்.  இதனால் சாலைமறியல் கைவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →