சுசீ ஈமு பார்ம் ரூ.250 கோடி மோசடி: நிர்வாக இயக்குநர் மீது புகார் பதிவு
ஈரோடு, ஆக.7 : ஈரோட்டில் சுசீ ஈமு பார்ம் என்ற ஈமுகோழிப் பண்ணையில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். அதில் ரூ.250 கோடி வரை முதலீடுகளைப் பெற்று மோசடி செய்துவிட்டதாக அதன் நிர்வாக இயக்குநர் மீது 200க்கும்
ஈரோடு, ஆக.7 : ஈரோட்டில் சுசீ ஈமு பார்ம் என்ற ஈமுகோழிப் பண்ணையில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். அதில் ரூ.250 கோடி வரை முதலீடுகளைப் பெற்று மோசடி செய்துவிட்டதாக அதன் நிர்வாக இயக்குநர் மீது 200க்கும் மேற்பட்டோர் கடந்த இரு நாட்களாக புகார் அளித்து வருகின்றனர்.
இந்தப் புகாரின் பேரில் நேற்று போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இன்றும் 200கும் அதிகமானோர் கூடி அதன் நிர்வாக இயக்குநர் பேரில் புகார் அளித்து, தங்கள் முதலீடுகள் குறித்து கேட்டனர். இதனால் எழுந்த பரபரப்பான சூழ் நிலையில் இது குறித்து டி.ஆர்.ஓ மாவட்ட வருவாய் அதிகாரி நடவடிகை மேற்கொள்வோம் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்தார். அவர்களுடன் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.