பிஆர்பி கிரானைட் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான பேருந்துகள் பறிமுதல்
மதுரை, ஆக., 16 : மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமாக 20 பேருந்துகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் செய்த முறைகே
மதுரை, ஆக., 16 : மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமாக 20 பேருந்துகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் செய்த முறைகேட்டுப் பணத்தைக் கொண்டுதான் இந்த பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதை அடுத்து பேருந்துகளை பறிமுதல் செய்யும் பணி துவங்கியுள்ளது.
அந்த வகையில் இன்று காலை மதுரை மேலூர் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த 2 பேருந்துகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அனைத்துப் பேருந்துகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.