ஊராட்சித் தலைவர் மீது பொய் வழக்கு என்று கூறி பொள்ளாச்சியில் மக்கள் முற்றுகை
பொள்ளாச்சி, ஆக.23: ஊராட்சித் தலைவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சி எஸ்.நல்லூர் ஊராட்சித் தலைவர
பொள்ளாச்சி, ஆக.23: ஊராட்சித் தலைவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி எஸ்.நல்லூர் ஊராட்சித் தலைவர் யுவராஜாவை அடிதடி வழக்கு ஒன்றில் காவல்துறை கைது செய்தது. இதை அடுத்து, எஸ்.நல்லூர், ரெட்டியாரூர் பகுதி பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதி ஊராட்சித் தலைவர் மீது பொய் வழக்கு போட்டு திசை திருப்புவதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், சார் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.