முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊழியர்களின் நலனுக்காக பண்ருட்டி அரசு பணிமனையில் ஹோமம்

பண்ருட்டி, ஆக., 27 : பண்ருட்டி அரசுப் பணிமனையில் இன்று, ஊழியர்களின் நலன் வேண்டியும், பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டியும் பணிமனை மேலாளர் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹோமம் நடைபெற்றது. இதுக

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:39 PM
பகிர்:

பண்ருட்டி, ஆக., 27 : பண்ருட்டி அரசுப் பணிமனையில் இன்று, ஊழியர்களின் நலன் வேண்டியும், பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டியும் பணிமனை மேலாளர் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹோமம் நடைபெற்றது.

இதுகுறித்து நமது செய்தியாளர் கூறுகையில், பண்ருட்டி அரசு பணிமனையில் இருந்து சுமார் 60 பேருந்து இயக்கப்படுகின்றன. அதில், 39 டவுன் பஸ் மற்றும் 20 புறநகர் பேருந்துகளாகும். இதில் நடத்துநர், ஓட்டுநர் உட்பட 350 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், டெப்போவில் பேருந்துகள் இருந்தும் ஊழியர்களின் விடுமுறை காரணமாக எப்போதும் 5, 6 வண்டிகள் இயக்க முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கும். ஊழியர்களின் விடுப்புக் காரணமாக கிராமப் புற பேருந்துகள் இயக்கம் அவ்வப்போது நிறுத்தப்படும்.

பண்ருட்டியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரத்துக்கு தற்போது புதிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை பஸ் ஸ்டான்ட்டில் வந்து நிற்கும். அதனை ஓட்டிய ஓட்டுநர் தனது பணி நேரம் முடிந்து சென்றுவிடுவார். அடுத்து இயக்கும் ஓட்டுநர் பணிக்கு வராததால் பேருந்து இயக்க முடியாமல் நிற்கும். பேருந்து வந்ததும், அதில் பொதுமக்கள் ஏறி அமர்ந்து கொள்வார்கள். ஆனால் பல மணி நேரம் ஆனாலும் பேருந்து இயக்கப்பட மாட்டாது. மற்றொரு பேருந்து வரும். இதில் இருந்து பயணிகள் அதில் ஏறி அமர்வார்கள். ஆனால் அதுவும் இயக்கப்படாது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் பண்ருட்டி பணிமனையில் சிறப்பு பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து பணிமனை மேலாளரிடம் விசாரித்ததில், பணியாளர்கள் பெரும்பாலும் ஒழுங்காக பணிக்கு வருவதில்லை. நன்றாக வீட்டுக்குச் செல்பவர்களுக்குக் கூட திடீர் திடீரென உடல நலக்குறைவு ஏற்படுகிறது. ஊழியர்கள் பலர், பணிக்கு வரும் வழியில் விபத்தில் சிக்கி கட்டுப் போட்டுக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து நடப்பதால், சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →