முகப்பு
தற்போதைய செய்திகள்

உதயகுமாரின் பாஸ்போர்ட் முடக்கம் : தமிழக அரசின் உத்தரவு ரத்து

மதுரை, ஆக., 31 : கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் சுப. உதயகுமாரின் பாஸ்போர்ட்டை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கி

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:43 PM
பகிர்:

மதுரை, ஆக., 31 : கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் சுப. உதயகுமாரின் பாஸ்போர்ட்டை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு வந்தது.

விசாரணையின்போது, உதயகுமார் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. எனினும், வழக்குகள் காவல்நிலையத்தில் மட்டுமே உள்ளன என்றும், நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை என்றும் உதயகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

உதயகுமாரின் வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உதயகுமாரின் பாஸ்போர்ட்டை முடக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →