மம்சாபுரம் பேரூராட்சியில் கொசு மருந்து ஊற்ற 10 பணியாளர் நியமனம்
விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடுகளில் குடிநீர் தொட்டிகளில் அபெட் மருந்து முறையாக ஊற்ற தினக் கூலி அடிப்படையில் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் பா.ஜெயச்சந்திரசேகரன் தெரிவித்தார்.
தற்போதைய செய்திகள்மம்சாபுரம் பேரூராட்சியில் கொசு மருந்து ஊற்ற 10 பணியாளர் நியமனம்
விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடுகளில் குடிநீர் தொட்டிகளில் அபெட் மருந்து முறையாக ஊற்ற தினக் கூலி அடிப்படையில் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் பா.ஜெயச்சந்திரசேகரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடுகளில் குடிநீர் தொட்டிகளில் அபெட் மருந்து முறையாக ஊற்ற தினக் கூலி அடிப்படையில் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் பா.ஜெயச்சந்திரசேகரன் தெரிவித்தார்.
பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை சனிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகையில் செயல் அலுவலர் ஜெயச்சந்திசேகரன் கூறியதாவது:
மம்சாபுரம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் மேற்பார்வையில் தினமும் அனைத்து வார்டுகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், கழிவு நீர் பாதை சுத்தப்படுத்துதல், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளிலும் முறையாக அபெட் மருந்து ஊற்ற 10 பணியாளர்கள் தினக் கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செயல் அலுவலர் பா.ஜெயச்சந்திரசேகரன் தலைமையில், பேரூராட்சி தலைவர் ரா.ராஜா முன்னிலையில், துணைத் தலைவரும், அரசு வழக்குரைஞருமான ப.அய்யனார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் சென்றனர். பேரணி மம்சாபுரத்தின் அனைத்து வார்டுகள் வழியே சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் பேரூராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
பேரணியில் பள்ளியின் தலைமை ஆசிரியை நி.அமுதா தங்கபூரணம், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் லட்சம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.