முகப்பு
தற்போதைய செய்திகள்

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் ஓரிரு நாளில் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் முண்டன்துறையில் இன்று நடைபெற்ற உள்ளூர் ஆலோசனைக்குழு கூட்டத்தில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தை ஓரிரு நாளில் திறக்கலாம் என முடிவு செய்ய

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் முண்டன்துறையில் இன்று நடைபெற்ற உள்ளூர் ஆலோசனைக்குழு கூட்டத்தில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தை ஓரிரு நாளில் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

புலிகள் சரணாலயங்களில்  சுற்றுலா செல்ல அனுமதிக்கக்கூடாது என கடந்த ஜூலை மாதம் 23 ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தேசிய புலிகள் பாதுகாப்பு

ஆணையம் புதிய நெறிமுறைகளை உருவாக்கியது. இதை தொடர்ந்து அக்டோபர் மாதம் 16 ம் தேதி உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது.

இதன்படி தமிழகத்தில் உள்ள ஆனமலை, முதுமலை சரணாலயங்கள் கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா செல்ல அனுமதிப்பது குறித்த உள்ளூர் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் முண்டன்துறையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய நெறிமுறைகளை பின்பற்றி நிபந்தனைகளுடன் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம், ஆலோசனைக்குழு தலைவரும், கூடுதல் தலைமை வன உயிரின பாதுகாவலருமான மல்கானி, புலிகள் காப்பகம் இயற்கை அமைப்பை கொண்டது. ஆகவே இது பாதுகாக்கப்பட வேண்டிய இடம். இருப்பினும் மக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டு்ம். நிபந்தனைகளுடன் காப்பகம் ஓரிரு நாளில் திறக்கப்படும் என தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →