முகப்பு
தற்போதைய செய்திகள்

உடல் நலம் குறித்து வதந்தி பரப்புவதாக கருணாநிதி குற்றச்சாட்டு

தனது உடல் நலம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On : 5 டிசம்பர், 2012 at 12:38 PM
பகிர்:

தனது உடல் நலம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று காலை முதலே கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. வெளியூர்களில் இருப்பவர்கள் பலரும், சென்னையில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தொலைபேசி வாயிலாக இந்த புரளி குறித்து விவரம் கேட்டவாறு இருந்தனர்.

இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, தான் நலமாக இருப்பதாகவும், சிலர் தனது உடல் நலம் குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

அறிவாலயத்தில் அவர் அளித்த மினி பேட்டி:

எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக வரும் வதந்திகளை நம்பவேண்டாம். நான் நலமுடன் உள்ளேன். விஷக் கிருமிகள் இத்தகைய புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர்.

காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை இரு மாநில அரசுகளும் பின்பற்றி நடக்க வேண்டும். 

காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ளத்தான் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் இரு மாநில அரசுகளையும் குறை கூற நான் விரும்பவில்லை!

- இவ்வாறு கூறினார் திமுக தலைவர் கருணாநிதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.