முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே கார் - லாரி மோதி விபத்து : 2 பேர் பலி

அரியலூரை அடுத்த ஜெயங்கொண்டம் அருகே கார் மீது லாரி மோதியதில் 2 விவசாயிகள் பலியானார்கள்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

அரியலூரை அடுத்த ஜெயங்கொண்டம் அருகே கார் மீது லாரி மோதியதில் 2 விவசாயிகள் பலியானார்கள்.

புதுச்சேரியில் இருந்து வந்த கார் ஒன்று, கங்கைகொண்ட சோழபுரம் வழியாக குருவாலப்பர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. புதுச்சேரியில் மருத்துவமனையில் உறவினர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அவரைப் பார்த்துவிட்டு சின்னக்குட்டி என்கிற ரவி காரில் திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அவர்கள் வந்த கார் கங்கைகொண்ட சோழபுரம் அருகே சம்போடை என்ற இடத்துக்கு வந்தபோது, எதிரே வந்த சிமிண்ட் ஏற்றிய லாரியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், இருவர் உயிரிழந்தனர்.

சின்னக்குட்டி என்கிற ரவி (45), குட்டிப்பிள்ளை என்கிற ரங்கராஜன் (33) இருவரும் உயிரிழந்தனர். காரில் வந்த அனைவருமே குருவாலப்பர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து நள்ளிரவு 12.30 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.மேலும் விபத்தில் காயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.