முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

ஆட்டோவில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:53 PM
பகிர்:

ஆட்டோவில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி வாகனத்தில் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து  நச்சியக்கவுண்டன் புதூர் சோதனைச் சாவடியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை மேற்கொண்டதில் காய்கறி மூட்டைக்கு கீழே ரேசன் அரிசி கடத்த இருந்தது தெரியவந்தது. உடனே ஆட்டோவில் இருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார் 2 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.