முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆட்டோவில் வீடு திரும்பும் போது விபத்து: 1-ம் வகுப்பு சிறுமி சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 1-ம் வகுப்பு சிறுமி வியாழக்கிழமை விபத்தில் உயிரிழந்தார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 1-ம் வகுப்பு சிறுமி வியாழக்கிழமை விபத்தில் உயிரிழந்தார்.

சேதுநாராயணபுரம், யாதவர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் வர்ஷினி (7). இவர் கூமாப்பட்டி வெங்கடேஸ்வரா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கதிரேஸ் தியேட்டர் அருகே ஆட்டோ வந்து கொணடிருந்துள்ளது. அப்போது சிறுமி வர்ஷினி ஆட்டோவிலிருந்து வெளியே எட்டி பார்த்துள்ளார். அப்போது எதிரே வந்த லோடு வேன், ஆட்டோவை ஒட்டிச் சென்றுள்ளது. இதில் சிறுமி வர்ஷினியின் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இது குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →