தற்போதைய செய்திகள்

நாமக்கல்லில் விபத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

அரசுப் பேருந்தால் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கப்படாததால் நாமக்கல்லில் கோவை கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

தமிழ்ச்செல்வன்

அரசுப் பேருந்தால் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கப்படாததால் நாமக்கல்லில் கோவை கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கடந்த 2005ஆம் ஆண்டு லாரி மீது கோவை கோட்டத்துக்குச் சொந்தமான அரசுப் பேருந்து மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் பலியானார். இந்த சம்பவம் குறித்து விசாரித்த நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், பலியான ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.3.86 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட செய்த மேல்முறையீடு வழக்கில், நஷ்டஈட்டுத் தொகையை உயர்த்தி ரூ.6.28 லட்சத்தை பாதிக்கப்பட்ட முருகேசனின் குடும்பத்துக்கு வழங்கிட  வேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

எனினும், நஷ்டஈட்டுத்தொகையை வழங்க போக்குவரத்துக் கழகம் காலதாமதம் செய்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சித்ரா தரப்பில் அண்மையில் நிறைவேற்ற மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கோவை கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்தை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்துக்கு நஷ்டஈட்டுத் தொகையை வழங்கிட உத்தரவிட்டார்.

இதனடிப்படையில், இன்று நாமக்கல்லிருந்து ஈரோடு செல்ல நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கோவை கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்தை நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்தனர். அரசு பேருந்து திடீரென ஜப்தி செய்யப்பட்டதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT