முகப்பு
தற்போதைய செய்திகள்

திடீர் பிரேக் போட்டதால் பஸ்ஸில் இருந்து விழுந்து மாணவி பலத்த காயம்

பஸ்ஸில் சென்று கொண்டிருந்த மாணவி, டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் பஸ்ஸில் இருந்து ரோட்டில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:03 PM
பகிர்:

பஸ்ஸில் சென்று கொண்டிருந்த மாணவி, டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் பஸ்ஸில் இருந்து ரோட்டில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், கீழத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மகள் முனீஸ்வரி (15). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

குன்னூரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு டவுன் பஸ்ஸில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். பஸ்ஸில் முனீஸ்வரி நின்று கொண்டு வந்துள்ளார். இந்திராநகர் கல்பாலம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் பஸ்ஸின் உள்ளே நின்று கொண்டிருந்த மாணவி முனீஸ்வரி ரோட்டில் வந்து விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து முனீஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அரசு பஸ் டிரைவர் மகாராஜபுரத்தைச் சேர்ந்த அ.ஜெயசுந்தர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →