முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலிடெக்னிக் சென்ற மாணவியை காணவில்லை : தந்தை புகார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலிடெக்னிக் சென்ற மாணவியை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்துள்ளார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலிடெக்னிக் சென்ற மாணவியை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ச.கிருஷ்ணமூர்த்தி (42). இவரது மகள் யோகசற்குரு லட்சுமி (16), ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் எம்.பி.கே.புதுப்பட்டி அருகேயுள்ள மஞ்சம்மாள் பாலிடெக்னிக்கில் முதலாண்டு டி.இ.சி.இ. படித்து வந்தார். தினமும் காலை ஊரிலிருந்து பஸ்ஸில் பாலிடெக்னிக் சென்றுவிட்டு மாலை வீடு திரும்புவாராம். திங்கள்கிழமை காலை பாலிடெக்னிக் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையாம். இது குறித்து வியாழக்கிழமை வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →