முகப்பு
தற்போதைய செய்திகள்

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் விழா: முன்னேற்பாடுகள் ஞாயிறு தொடக்கம்

காரைக்கால், பிப். 11 : ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை நடக்கும் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் பூஜை விழா மே மாதம் 23, 24 தேதிகளில் நடைபெறவுள்ளதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பூஜை விழாவுக்கான முன்னேற்பாடுகள் கஞ்சி வார்த்தல

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

காரைக்கால், பிப். 11 : ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை நடக்கும் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் பூஜை விழா மே மாதம் 23, 24 தேதிகளில் நடைபெறவுள்ளதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பூஜை விழாவுக்கான முன்னேற்பாடுகள் கஞ்சி வார்த்தல், தளியல் போடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தில் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறது  ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் என்றழைக்கப்படும் ஸ்ரீ வீரமாகாளியம்மன். பேழையில் (பெட்டி) இருந்தவாறு அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கொரு முறை எழுந்தருளச் செய்து, 2 நாள்கள் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.

எந்த வகை பொருள்களானாலும் ஆயிரம் எண்ணிக்கையை கடந்து அம்பாளுக்கு படையல் செய்யப்படுவது பக்தர்களிடையே மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது.

மே மாதம் விழா நடத்துவதற்கான தேதிகள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி இவ்விழா முறைப்படி தொடங்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல், காளியம்மன் கோயிலில் கஞ்சிவார்த்தல் அம்பாளுக்கு மகா தீபாராதனை நடத்தப்படுகிறது. இரவு ஏராளமான பழ வர்க்கங்கள், சித்ரானங்களுடன் தளியல் போடப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்படுகிறது.

மே மாதம் 16ஆம் தேதி காளியம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு விழாவும், 21ஆம் தேதி தேதி அம்பாள் வீற்றிருக்கும் பெட்டி திறத்தலும், 22ஆம் தேதி நாள் முழுவதும் அம்பாள் அலங்காரம் நடைபெற்று, மாலை ஆயிரம் ஆயிரம் பொருள்களுடன் ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் இருந்து வரிசை புறப்பட்டு, வீதியுலா முடித்து 23ஆம் தேதி அதிகாலை மகா தளியல் தீபாராதனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் சன்னதி திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 24ஆம் தேதி வரை அம்பாள் தரிசனம் செய்யமுடியும்.

இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருமலைராயன்பட்டினத்தில் குவிவார்கள். இத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஆயிரங்காளிம்மன் ஆலய நிர்வாகம் செய்துவருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →